கோழி-நரி டாஸ்க்: அர்ச்சனாவை மறைமுகமாக கிண்டல் செய்த கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோழிப்பண்ணை டாஸ்க்கின் பஞ்சாயத்து இன்னும் முடிந்தபாடில்லை. இன்றைய இரண்டாம் புரமோவில் மீண்டும் கோழி-நரி டாஸ்க்கின் பஞ்சாயத்து வருகிறது.

முதலில் அர்ச்சனா கோழி நரி டாஸ்க்கில் கோழியாக இருந்தபோது முட்டையை அரவணைத்தது நன்றாக இருந்தது என பாராட்டிய கமல்ஹாசன், ஃப்னிஷிங் தான் சரியில்லை என்றும், முட்டை உடைந்ததற்கு அவ்வளவு ஆவேசம் ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது அந்த முட்டையில் எனது போட்டோ இருந்தது, சோம் அதை உடைத்ததால் எனக்கு கோபம் வந்தது என கூற, உடனே கமல், ‘நாம் ஏற்கனவே போட்டோவை கிழிச்சி, தீயில் எரித்துள்ளோம், அப்போது வராத கோபம் இப்போது ஏன் வந்தது என மடக்கினார்.

மேலும் என் முன்னாடியே உடைத்ததால் கோபம் என அர்ச்சனா சமாளிக்க, உடனே கமல்ஹாசன் கிண்டலுடன் சோம்சேகரிடம், ‘நீங்கள் ஏன் அர்ச்சனா முன்னாடியே உடைத்தீர்கள், பின்னாடி உடைத்திருக்கலாமே என கிண்டல் செய்தார். கமல்ஹாசனின் கிண்டலை புரிந்து கொண்டாலும் சிரித்து கொண்டே வழக்கம்போல் சமாளிக்கின்றார். அர்ச்சனா.

மொத்தத்தில் நேற்று அர்ச்சனா கோழி போல் அன்பாக அரவணைப்பார்கள் என்று ஹவுஸ்மேட்ஸ் பாராட்டிய நிலையில் அதற்கு நேர்மாறாக இன்று அர்ச்சனா என்ற கோழியை வறுத்து, குழம்பு வைத்துவிட்டார் நம்மவர் என நெட்டிசன்கள் இந்த புரமோ வீடியோவுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர். ஒருசிலரோ, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கிண்டலுடன் கண்டித்தால் அர்ச்சனாவுக்கு புரியாது, குறும்படம் போட்டு அர்ச்சனாவின் வாயை அடைக்க வேண்டும் என்று கமெண்ட் அளித்து வருகின்றனர்.

More News

சிம்புவின் ஹிட் பட இரண்டாம் பாக அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடித்த 'போடா போடி' என்ற திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இன்று பிரபலமாக இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனின்

நேரடி ஒளிபரப்பில் பெண் ரிப்போர்ட்டரின் பெல்ட்டை உருவிய பூனை: வைரல் வீடியோ!

நேரடி ஒளிபரப்பில் பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் செய்திகளை தந்து கொண்டிருந்த போது அவரது கோட்டில் உள்ள பெல்ட்டை உருவ பூனை ஒன்று முயற்சித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

மாளவிகா மோகனனுடன் மீண்டும் இணையும் 'மாஸ்டர்' நடிகர்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளார்கள்

சித்ரா மரணத்திற்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதையும் ஒரு காரணமா?

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இன்று எவிக்ட் ஆவது ஒருவரா? இருவரா?: டென்ஷன் ஏற்றிய கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் ஒருவர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அந்த வீட்டில் உள்ள ஒருவர் வெளியேற உள்ளார்