close
Choose your channels

கோழி-நரி டாஸ்க்: அர்ச்சனாவை மறைமுகமாக கிண்டல் செய்த கமல்ஹாசன்

Sunday, December 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோழிப்பண்ணை டாஸ்க்கின் பஞ்சாயத்து இன்னும் முடிந்தபாடில்லை. இன்றைய இரண்டாம் புரமோவில் மீண்டும் கோழி-நரி டாஸ்க்கின் பஞ்சாயத்து வருகிறது.

முதலில் அர்ச்சனா கோழி நரி டாஸ்க்கில் கோழியாக இருந்தபோது முட்டையை அரவணைத்தது நன்றாக இருந்தது என பாராட்டிய கமல்ஹாசன், ஃப்னிஷிங் தான் சரியில்லை என்றும், முட்டை உடைந்ததற்கு அவ்வளவு ஆவேசம் ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது அந்த முட்டையில் எனது போட்டோ இருந்தது, சோம் அதை உடைத்ததால் எனக்கு கோபம் வந்தது என கூற, உடனே கமல், ‘நாம் ஏற்கனவே போட்டோவை கிழிச்சி, தீயில் எரித்துள்ளோம், அப்போது வராத கோபம் இப்போது ஏன் வந்தது என மடக்கினார்.

மேலும் என் முன்னாடியே உடைத்ததால் கோபம் என அர்ச்சனா சமாளிக்க, உடனே கமல்ஹாசன் கிண்டலுடன் சோம்சேகரிடம், ‘நீங்கள் ஏன் அர்ச்சனா முன்னாடியே உடைத்தீர்கள், பின்னாடி உடைத்திருக்கலாமே என கிண்டல் செய்தார். கமல்ஹாசனின் கிண்டலை புரிந்து கொண்டாலும் சிரித்து கொண்டே வழக்கம்போல் சமாளிக்கின்றார். அர்ச்சனா.

மொத்தத்தில் நேற்று அர்ச்சனா கோழி போல் அன்பாக அரவணைப்பார்கள் என்று ஹவுஸ்மேட்ஸ் பாராட்டிய நிலையில் அதற்கு நேர்மாறாக இன்று அர்ச்சனா என்ற கோழியை வறுத்து, குழம்பு வைத்துவிட்டார் நம்மவர் என நெட்டிசன்கள் இந்த புரமோ வீடியோவுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர். ஒருசிலரோ, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கிண்டலுடன் கண்டித்தால் அர்ச்சனாவுக்கு புரியாது, குறும்படம் போட்டு அர்ச்சனாவின் வாயை அடைக்க வேண்டும் என்று கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.