close
Choose your channels

நிஷா ராக்கிங்: இந்த பெர்ஃபார்மன்ஸை முதலிலேயே காட்டியிருக்கலாமே!

Monday, January 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் சிறப்பு விருந்தாளியாக வந்திருக்கும் நிலையில் வீடே கோலாகலமாக உள்ளது. பிக்பாஸ் ஆரம்பித்த முதல் பத்து நாட்கள் நிஷா சூப்பராக விளையாடி கொண்டிருந்த நிலையில் அர்ச்சனாவின் வருகைக்கு பின் அவரது அன்பில் சிக்கி விளையாட்டில் இருந்தே கிட்டத்தட்ட ஒதுங்கிவிட்டார்.

இந்த நிலையில் இன்று சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் நிஷா செம கலக்கு கலக்குகிறார். இதை அவர் வீட்டில் இருக்கும்போது செய்திருந்தால் அவர் தான் டைட்டில் வின்னராக இருந்திருப்பார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் போடுகின்றனர். குறிப்பாக அர்ச்சனாவின் ஆட்டம் செம. நீ ஜெயிச்சா எல்லோருக்கும் சந்தோஷம் என்று சோம்சேகரை வாழ்த்தும் ரேகா, ஆரியையும் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிக்கின்றார்.

மொத்தத்தில் அன்பு குரூப் மட்டும் உள்ளே வந்திருந்தாலும், பழைய குரூப்பை ஃபாலோ செய்யாமல் அனைவரிடமும் கலகலப்பாக இருப்பதை பார்க்கும்போது பார்வையாளர்களின் விமர்சனங்களை முழுவதும் படித்து திருந்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.