காதல் கண்ணை மறைக்குது: மோதல் வெடிக்கும் நிலையில் பாலாஜி-ரியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தபோது பாலாஜியை ’காதல் கண்ணை மறைக்குது’ என்று கூறியது ஆரி. ஆனால் ஆரி என்று தெரியாத பாலாஜி அனைவரையும் சகட்டுமேனிக்கு கடுமையாகப் பேசி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இன்றைய அடுத்த புரமோவில் ரியோ டென்ஷன் ஆகிறார். ‘பாலா சொன்ன வார்த்தையை ரொம்ப தப்பு என்றும் இரண்டு பேர்கள் தான் நாமினேட் செய்து இருக்கின்றார்கள் என்றால் 15 பேர்கள் இருக்கும்போது அதை சொல்ல கூடாது என்று கூறுகிறார். என்னுடைய பேமிலியில் இருக்கின்றவர்களும் உன்னுடைய ஃபேமிலியல் உள்ளவர்களும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசிங்கமாக ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால் அவர்களுக்கு வலிக்காதா? இங்கு வந்திருக்கும் போட்டியாளர்கள் பொடிப்பசங்களோ, ஸ்கூல் பசங்களோ அல்ல விளையாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் பேசி கொண்டு செல்லலாம் என்று கூறுவதற்கு? என்று தனது வாதத்தை வைக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலாஜி கூறியபோது ’காதல் கண்ணை மறைக்குது என்று கூறினால் என்ன அர்த்தம்? கண்ணை மறைக்கும் அளவுக்கா நாங்கள் காதல் பண்ணிகிட்டு சுற்றிக் கொண்டு இருக்கிறோம்? என்றும் எனக்கும்தான் வெளியில நல்ல பெயர் இருக்கிறது, இங்கே வந்து நான் லவ் பண்றதுக்கு வந்திருக்கின்றேன்? எனக்கும் தான் வருத்தமாக உள்ளது, தப்பாயிடும்’ என்று எச்சரிக்கின்றார்.

மொத்தத்தில் பிக்பாஸ் கொளுத்தி போட்ட சரவெடியால் இன்று பாலாஜி-ரியோ மோதல் வெடிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

விவாகரத்து தொடர்ந்தால் யார் பெரிய பணக்காரி? மெலானியா, இவாங்காவைத் தொடரும் அடுத்த கேள்வி!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கடும் பின்னடவை சந்தித்த நிலையில் தனது குடும்ப வாழ்க்கையிலும் அவர் தோல்வியை சந்திக்க உள்ளார்

'பிஸ்கோத்' வெளியாக 2 மணி நேரத்திற்கு முன் வந்த சிக்கல்: இயக்குனர் ஆர்.கண்ணன்

'பிஸ்கோத்' திரைப்படம் வெளியாக 2 மணி நேரத்திற்கு முன் ஒரு சிக்கல் ஏற்பட்டதாகவும் அந்த சிக்கல் சந்தானம் அவர்களால் தான் தீர்க்கப்பட்டது என்றும் இயக்குனர் ஆர் கண்ணன் தெரிவித்துள்ளார் 

தம்பி ஆர்ஜே பாலாஜிக்கு வாழ்த்துக்கள்: பிரபல அரசியல்வாதியின் 'மூக்குத்தி அம்மன்' விமர்சனம்!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் தீபாவளி விருந்தாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்த நிலையில்

'மூக்குத்தி அம்மன்' படத்தால் யூடியூபில் திடீரென வைரலான வீடியோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

ஒரு பக்கம் ரெளடி பேபி, இன்னொரு பக்கம் கொலைவெறி: தனுஷின் உற்சாக டுவீட்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரவுடி பேபி மற்றும் கொலைவெறி பாடல் குறித்து பதிவு செய்துள்ள டுவீட் தற்போது வைரலாகி வருகிறது