close
Choose your channels

'மூக்குத்தி அம்மன்' படத்தால் யூடியூபில் திடீரென வைரலான வீடியோ!

Monday, November 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் உள்ள பல காட்சிகள் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் இருந்த நிலையில் ஒரு காட்சியை இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் மூக்குத்தி அம்மனை நேரில் வரவழைக்க ஆர்ஜே பாலாஜி ஒரு பாட்டு பாடுவார் என்பதும் அந்த பாட்டை பாடி முடித்தவுடன் மூக்குத்தி அம்மன் நேரில் வருவார் என்பதும் படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அந்த பாடல் கே பாக்யராஜ் நடித்து இயக்கிய ’அந்த 7 நாட்கள்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நகைச்சுவை பாடல் காட்சி யூடியூபில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை யாராலும் கண்டு கொள்ளப்படாமல் இருந்தன. ஆனால் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது முதல் இந்த பாடலுக்கு திடீரென மவுசு கூடி விட்டது. இந்த பாடலின் வீடியோக்கள் அனைத்துமே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்த இரண்டு நாட்களில் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூக்குத்தி அம்மன் படத்தால் இந்த பாடல் திடீரென யூ-டியூபில் வைரல் ஆனதை நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட நிலையில் அந்த பதிவுக்கு ஆர்ஜே பாலாஜி ஸ்மைலிங் ஃபேஸ் எமோஜியை பதிலாக தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.