யார் யாருக்கு எந்த வாக்கியம்: டாஸ்க்கின் முடிவுகள்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த வாக்கியம் பொருத்தம் டாஸ்கில் ஒவ்வொருவருக்கும் வந்த வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ அவர்களுடைய கட்-அவுட்டில் ஒட்ட வேண்டும் என்று பிக்பாஸ் கூறியதை அடுத்து இதுவரை வந்த வாக்கியம் யார் யாருக்கு பொருந்தியது என்பதை பார்ப்போம்.

ரூபம் செம்மை செய்: இந்த வாக்கியம். அதாவது உங்களுடைய உண்மையான நல்ல குணங்கள் எண்ணம் உயர்வாக இருக்க செம்மைப் படுத்திக் கொள்ளுங்கள் என்ற இந்த வாக்கியம் பாலாவுக்கு சென்றதையடுத்து அவரது கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.

கூடிப் பிரியேல்: நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே என்ற அர்த்தம் கொண்ட இந்த வார்த்தை கேபிக்கு சென்றதை அடுத்து அவருடைய கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.

காலம் அழியேல்: காலத்தை வீணாக்காதே என்ற இந்த வாக்கியம் ஷிவானிக்கு ஒட்டப்பட்டது

சுமையினுக்கு இளைத்திடேல்: பொறுப்பினை கண்டு ஓடாதே என்ற வார்த்தை பாலாவின் கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது

தேசத்தோடு ஒட்டிவாழ்: இந்த வாக்கியம் ஆரியின் கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது

நன்றி மறவேல்: இந்த வாக்கியம் சோம்க்கு கிடைத்தது

துன்பம் மறந்திடு: என்ற வாக்கியம் பாலாவுக்கு கிடைத்ததை அடுத்து அவரது கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.

ஒளவியம் பேசேல்: பொறாமை கண்டு பேசுவது கூடாது என்ற வார்த்தையும் ஆரிக்கே கிடைத்ததை அடுத்து அவரது கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.

தீயினால் சுட்டி புண் உள்ளாறும்: என்ற வார்த்தை பாலாவுக்கு கிடைத்ததை அடுத்து அவரது கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.

இதனையடுத்து இந்த டாஸ்க் நாளையும் தொடரும் என பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது.

More News

பாலாஜிக்கு பிக்பாஸ் கொடுத்த ஸ்பெஷல் பவர் இதுதானா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த டாஸ்க்கின் இறுதிகட்டம் நடைபெறுகிறது.

பிக்பாஸ் வீட்டில் 'அணைப்பு' கொஞ்சம் ஓவர்தான்: ஒரு இசையமைப்பாளரின் பதிவு!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதோ, வருத்தத்தில் இருக்கும்போதோ அல்லது டாஸ்க்கில் வெற்றி பெற்றாலோ ஒருவரை ஒருவர் அணைத்து கொள்வது சர்வசாதாரணமாக

பாலாவை நிறைய தடவை ட்ரை பண்ணியிருக்கேன்: 'கூடிப்பிரியேல்'க்கு க்யூட் விளக்கம் தந்த கேபி!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு வாக்கியம் கொடுக்கப்பட்டு

அரசியலில் நாகரிகம் மிகவும் முக்கியம்… முகம் சுளிக்க வைக்கும் எதிர்க்கட்சி மீதான விமர்சனங்கள்!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான  தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

தனுஷின் அடுத்த படத்தில் சூப்பர் கிரேஸி பாடல்: டான்ஸ் மாஸ்டர் அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு சூப்பர் கிரேஸி பாடல் ஒன்று இடம் பெறவுள்ளதாக டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தனது