close
Choose your channels

பாலாஜிக்கு பிக்பாஸ் கொடுத்த ஸ்பெஷல் பவர் இதுதானா?

Thursday, January 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த டாஸ்க்கின் இறுதிகட்டம் நடைபெறுகிறது. இதுவரை ஏழு சுற்றுக்கள் முடிந்துள்ள நிலையில் எட்டாவது சுற்று இன்றைய நிகழ்ச்சியில் நடைபெறுகிறது.

வளையம் ஒன்றில் உள்ள பந்துகளை எடுத்து இன்னொரு பக்கத்தில் உள்ள வளையத்தில் வைத்துவிட்டு மீண்டும் பழைய வளையத்துக்கு பந்துகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் டாஸ்க். வழக்கம்போல் இந்த டாஸ்க்கில் முதலிடம் வருபவருக்கு 7 புள்ளிகளும் கடைசி இடத்தை பெறுபவர் ஒரு புள்ளியையும் பெறுவர்.

இந்த நிலையில் பாலாஜிக்கு ஏற்கனவே கோழி மற்றும் நரி டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியதற்காக ஒரு ஸ்பெஷல் பவர் வழங்கப்பட்ட நிலையில் அந்த ஸ்பெஷல் பவர் இந்த டாஸ்க்கில் அவர் யாருடன் மோதி கொள்ளலாம் என்பதை அவரே முடிவு செய்யது கொள்ளலாம் என்று கொடுக்கப்படுகிறது. இதுதான் ஸ்பெஷல் பவர் என்று பிக்பாஸ் அறிவித்தபோது பாலாஜிக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் கடும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த டாஸ்க் விறுவிறுப்பாக நடந்த நிலையில் இறுதியில் சோம் முதலிடத்தை பெற்றதால் அவருக்கு 7 புள்ளிகள் கிடைத்துள்ளன. சோம்சேகருடன் மோதிய கேபி 2ஆம் இடத்தை பெற்று 6 புள்ளிகளை பெற்றார்.

இந்த நிலையில் இந்த டாஸ்க்கின் முடிவில் போட்டியாளர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் பின்வருமாறு:

சோம் சேகர்: 32
ரியோ ராஜ்: 32
பாலாஜி: 30
ரம்யா: 28
ஷிவானி: 28
ஆரி: 24
கேப்ரில்லா: 22

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.