ஹவுஸ்மேட்ஸ்களை உருண்டு புரளவைத்த பிக்பாஸ்: வெற்றியை முடிவு செய்யும் 3வது அம்பயர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே 6 சுற்றுகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 7வது சுற்று நடைபெறுகிறது

இந்த சுற்றில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற ஆறு பேர்களுடன் உருண்டு உருண்டு பந்துகளை ஒரு வளையத்தில் இருந்து எடுத்து இன்னொரு வளையத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன்பின் அனைத்து பந்துகளையும் மீண்டும் முதலில் இருந்த வளையத்தில் வைக்க வேண்டும் என்றும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது

இதில் கடைசியாக முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியில் பாலாஜி மற்றும் கேபி ஆகியோர் இடையே நடைபெறுவது போல் தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட இருவருமே ஒரே நேரத்தில் டாஸ்க்கை முடித்ததுபோல் தெரிந்ததால் யார் வெற்றியாளர் என்பதை 3வது அம்பயர் முடிவு செய்வார் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இந்த சுற்றில் வெற்றி பெற்று 7 புள்ளிகளை எடுக்க போவது பாலாவா? அல்லது கேபியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

கடந்த ஆறு சுற்றுகளிலும் இந்த டாஸ்க்கை சரியாக விளையாடாமல் புள்ளிக்கணக்கில் கடைசி இடத்தில் உள்ள கேபி, இந்த சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஃபினாலே டாஸ்க்; கடைசி இடத்தை பிடித்த பின் ஆரி பேசிய மாஸ் பஞ்ச் டயலாக்

ஃபினாலே டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற ஆறு போட்டியாளர்களின் குறையை சொல்ல வேண்டும் என்ற நிலையில் முதலில் தொடங்கும் ஆரி ஒவ்வொருவரின் குறையையும்

நல்லவன், கெட்டவன் எவனும் இல்லை: பாட்டு பாடும் பாலாஜியை முறைக்கும் ஆரி!

பிக்பாஸ் வீட்டில் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் கமல்ஹாசன் பாலாஜிக்கு

'மாஸ்டர்' திரைப்படத்திற்கு மத்திய அரசால் ஏற்பட்ட திடீர் சிக்கல்: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் ரிலீஸ் ஆவதற்காகவே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்கப்படும்

பழைய சோற்றில் இத்தனை நன்மைகளா??? சுகாதாரத் துறையே கொடுத்த சர்டிபிகேட்!!!

புளித்துப்போன பழையச் சோற்றைத் தற்போது தமிழக சுகாதாரத்துறையும் கொண்டாடி வருகிறது.

முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்: விஜய் எச்சரிக்கை

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தினந்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது