சிபியுடன் மோதல்: வீட்டின் பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் அக்சரா!

சிபியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை அக்ஷரா தூக்கி போட்டு உடைக்கும் காட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி 52வது நாளாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது ‘கனா காணும் காலங்கள்’ என்ற பள்ளிக்கூட டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய புரோமோவில் என்னுடைய உடையை ஸ்டீம் செய்ய வேண்டும் என்று வார்டன் சிபியிடம் அக்சரா அனுமதி கேட்கிறார். அதற்கு சிபி அனுமதி கொடுத்தாலும் உடனடியாக வரவேண்டும் என்றும், நேரமாகிவிட்டது என்றும் கூறுகிறார்

இதனால் டென்ஷனான அக்ஷரா எனக்கு போதுமான டைம் கொடுக்க வேண்டும் என்று அவசரப்படுத்தினால் எந்த வேலையும் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். இதனால் கோபப்படும் சிபி, ஸ்டீம் செய்வதற்கு அனுமதி கொடுக்க முடியாது என்று கூற, ‘நான் அப்படித்தான் செய்வேன், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஆவேசத்துடன் அக்ஷரா செல்கிறார்

இதனை அடுத்து பாத்ரூம் பகுதிக்கு செல்லும் அக்ஷரா கோபத்தில் அங்கிருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் காட்சி இன்றைய முதல் புரமோவில் இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இதை மட்டும் சாப்பிடவேண்டாம்… பிசிசிஐ உத்தரவால் வெடித்த சர்ச்சை!

இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அதில் வீரர்கள் ஹலால் இறைச்சியை சாப்பிடலாம்

தாஜ்மஹால் கட்டிய கணவர்… வாழும்போதே அன்பு மனைவிக்கு காதல் பரிசு!

முகலாயர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஷாஜகான் தன்னுடைய காதலி மும்தாஜ் இறந்தபின்பு அவருக்காக காதல் சின்னமான

சொந்த மகள்போல பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய காவலர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்!

நிறைமாதக் கர்ப்பிணியான பெண் போலீஸ் ஒருவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சென்னையில் தவித்து வந்துள்ளார்.

பிரச்சனை மேல் பிரச்சனை: சூர்யாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் இவரா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டதில் இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.