குறை சொன்ன அண்ணாச்சிக்கு அக்சரா கொடுத்த பதிலடி!

நேற்று பிக்பாஸ் வீட்டில் ’சினிமா சினிமா’ என்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் அக்ஷராவின் நடிப்பை குறை சொல்லிய இமான் அண்ணாச்சிக்கு அக்ஷரா கொடுத்த பதிலடி இன்றைய அடுத்த புரமோவில் வந்துள்ளது

நேற்று ’சினிமா சினிமா’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அக்ஷராவுக்கு ’படையப்பா’ படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த கேரக்டரில் அவர் நடித்ததை இன்று இமான் அண்ணாச்சி விமர்சனம் செய்யும் காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன

அக்ஷராவின் நடிப்பின் மீது எனக்கு ஈடுபாடு வரவில்லை என்றும் அந்த படத்தை அவர் பார்க்கவில்லையா அல்லது நீலாம்பரி கேரக்டர் குறித்து அவருக்கு தெரியவில்லையா என்று எனக்கு புரியவில்லை என்று இமான் அண்ணாச்சி கூறுகிறார்

இதனை அடுத்து சக போட்டியாளர்கள் இமான் அண்ணாச்சியிடம் அக்ஷராவின் நடிப்பை குறை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அதன்பிறகு இமான் அண்ணாச்சி, ‘அக்ஷரா ஏன் என்னிடம் நீலாம்பரி மாதிரி பேசவில்லை என்று கேட்க அதற்கு அக்சரா, ‘உங்கள் வயதுக்கு நான் மரியாதை கொடுத்தேன். உங்களை சொடக்கு போட்டு கூப்பிட்டு, இப்படி உட்காரு என்று சொல்வதற்கு எனக்கு மனம் வரவில்லை என்று கூறியது இமான் அண்ணாச்சிக்கு மிகப்பெரிய பதிலடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


More News

விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!

தேசிய அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

என்னை தக்கவைக்க வேண்டாம்- தோனியின் பேச்சால் ஆடிப்போன ரசிகர்கள்!

அடுத்த ஐபிஎல் தொடருக்காக என்னை அதிகவிலை கொடுத்து தக்கவைக்க வேண்டாம் என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேப்டன்

திருப்பதி கோவிலில் நடிகை ரோஜாவுடன் விஷால்: வைரல் புகைப்படம்!

விஷால், ஆர்யா நடித்த 'எனிமி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக இன்று விஷால் திருப்பதி ஏழுமலையான் கோவில்

தங்கக்கடத்தல், தீவிரவாதிகள், ஜார்ஜியாவில் கிளைமாக்ஸ்: 'பீஸ்ட்' குறித்த ஆச்சரியமான தகவல்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் முன்னணி ஊடகம் ஒன்றில் 'பீஸ்ட்' குறித்த முக்கியமான தகவல்கள் ஒருசில வெளிவந்து

ஆட்டம் போடும் நிரூப்பை அடுத்த வாரம் வச்சு செய்வாரா பாவனி?

பிக்பாஸ் வீட்டில் ஐந்து காயின்கள் ஐந்து போட்டியாளர்களிடம் இருக்கும் நிலையில்  ஒவ்வொரு வாரமும் ஒரு காயினுக்கு சக்தி வழங்கப்படும் நிலையில் அந்த காயின் வைத்திருப்பவர்கள். வீட்டில் உள்ள மற்ற