close
Choose your channels

தங்கக்கடத்தல், தீவிரவாதிகள், ஜார்ஜியாவில் கிளைமாக்ஸ்: 'பீஸ்ட்' குறித்த ஆச்சரியமான தகவல்கள்

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் முன்னணி ஊடகம் ஒன்றில் ‘பீஸ்ட்’ குறித்த முக்கியமான தகவல்கள் ஒருசில வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷி ஆக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பீஸ்ட்’ படத்தின் கதை ஒரு தங்க கடத்தல் தொடர்பான கதை என்றும் தங்க கடத்தல் செய்த தீவிரவாதிகள் மால் ஒன்றில் புகுந்து கொண்டு அங்கு உள்ள பொதுமக்களை பணயமாக வைத்து கொண்டிருக்கும் நிலையில் பொது மக்களை காப்பாற்றவும் தீவிரவாதிகளை பிடிக்கவும் விஜய் செய்யும் அதிரடி தான் ‘பீஸ்ட்’ படத்தின் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் செல்வராகவன் உள்பட மூன்று வில்லன்கள் நடித்து உள்ளார்கள் என்பதும் செல்வராகவனின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கலை இயக்குனர் கிரண் அவர்களின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு அதில் படமாக்கப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் நடந்த டெல்லி ஷெட்யூலில் கூட ஷாப்பிங் மால் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது மேலும் ஈவிபி, டெல்லி ஆகிய ஷெட்யூல்களை அடுத்து மீண்டும் கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் அங்கு பத்து நாட்கள் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதன் பின்னர் ஜார்ஜியா செல்லும் படக்குழு அங்கு கிளைமஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் இந்த படத்திற்கு தேவையான அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் இந்த படத்தில் விஜய் - பூஜாவிற்கு இரண்டு டூயட் பாடல்கள் இருப்பதாகவும் அதில் ஒரு டூயட் பாடலை சிவகார்த்திகேயன் எழுதி தனுஷ் பாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘பீஸ்ட்’ படத்தின் இதுவரை வெளிவராத இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.