இதுக்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டும்தான்: கதறி அழுத நமிதா மாரிமுத்து

கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜாலியாகவும் கூத்தும் கும்மாளமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை சொல்லும் காட்சிகள் மட்டுமே சோகமயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் சிலர் தங்களுடைய கதையை உருக வைக்கும் அளவுக்கு கூறிய நிலையில் இன்று நெஞ்சை உலுக்கும் வகையில் நமிதா மாரிமுத்து தனது கதையை கூறியுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கை போட்டியாளரான அவர் கூறியபோது ’நம்ம வாழ்க்கையில் எப்போதுமே ஒருவரிடம் குறை இருந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்கள் அம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க. ஆனால் என்னிடம் ஒரு குறை ஏற்பட்டபோது எங்க அம்மா என்னை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. என்னை அடி அடியென்று அடித்தார்கள். உடம்பெல்லாம் மரத்து போய்விட்டது

இந்த சமுதாயத்தில் திருநங்கைகள் எல்லாருமே பாலியல் நபர்களாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும் தான் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டுமே. வேறு யாரும் காரணம் இல்லை. எங்களை மாறுங்கள் மாறுங்கள் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் எப்போதோ மாறிவிட்டோம், நீங்கள்தான் மாற வேண்டும் என்று அவர் கதறி அழுது கொண்டே கூறியது சக போட்டியாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது

மொத்தத்தில் நமிதா மாரிமுத்து ஒட்டுமொத்த திருநங்கைகளின் மனக்குமுறல்களை இன்று வெளிப்படுத்தும் காட்சியாக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என் மனைவிக்கு 100 பவுன் போட்டேன்: இமான் அண்ணாச்சியின் நெகிழ்ச்சியான கதை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதை, சோக கதையை தெரிவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று இமான் அண்ணாச்சி

யோவ் பிக்பாஸ் பெரிசு, நைட்டியை ஏன்யா திருடுற... பங்கமாய் கலாய்த்த ப்ரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக்பாஸ் யார் என்று யாரும் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் அந்த குரலுக்கு அனைத்து போட்டியாளர்களும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள்.

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது

தேவாலயங்களில் 3.50 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை… பகீர் அறிக்கை!

பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கடந்த 70 ஆண்டுகளாக 3.30 லட்சம் சிறுவர்,

ரம்பை, ஊர்வசியை மிஞ்சிய மாளவிகா மோகனன்… ரசிகர்களே ஷாக்காக்கும் வைரல் பிக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “பேட்ட“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்