close
Choose your channels

'நீங்க சும்மா கத்தாதீங்க': தாமரையுடன் மோதும் இன்னொரு போட்டியாளர்!

Monday, January 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காரசாரமாக போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும் வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஒற்றுமையுடன் கட்டிப் பிடித்துக் கொள்வதுமான காட்சிகளை கடந்த ஐந்து சீசன்களில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த சீசனில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் தாமரையுடன் சண்டை போட்டு வருகிறார் என்பதும் ஆனால் வெள்ளிக்கிழமை இரவு திடீரென சமாதானமாகி விடுவதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த முட்டை உடைக்கும் டாஸ்க்கில் இருந்தே அமீருக்கும், தாமரைக்கும் முட்டி மோதிக் கொண்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று இருவருக்கும் இடையே காரசாரமாக சண்டை நடக்கிறது. தாமரை வழக்கம்போல் தன்னுடைய கருத்தை கத்தி சொல்ல, ‘நீங்க சும்மா கத்தாதீங்க என்று அமீர் சொல்ல இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றுகிறது.

வழக்கம்போல் சக போட்டியாளர்கள் இந்த சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சண்டையின் முடிவு எப்படி இருக்கும் என்பதையும் இந்த வார இறுதியில் அமீர், தாமரை இருவரும் ஒற்றுமையாகி விடுவார்களா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.