இனிமேல் கிசுகிசு பேச முடியாது: பிக்பாஸ் புதிய புரமோ வீடியோ

  • IndiaGlitz, [Friday,September 17 2021]

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிமைப்படுத்தும் காலம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே இரண்டு புரமோ வீடியோக்கள் வந்த நிலையில் தற்போது மூன்றாவது புரமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் கட்டிலில் படுத்துக் கொண்டே கமல்ஹாசன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது யாரோ கிசுகிசுவென பேசும் சத்தம் கேட்கிறது. உடனே அவர் ’யார் அது’ என்று கேட்டபோது பதில் வரவில்லை. மீண்டும் அதே குரல் கேட்டதை அடுத்து மீண்டும் பதில் வரவில்லை.

இதனை அடுத்து இந்த வீட்டில் இனிமேல் கிசுகிசு பேச முடியாது என்று கமல் கூறும்போது அவருக்கே வார்னிங் கொடுக்கும் அளவுக்கு ஒரு குரல் கேட்கிறது. யாருமே கேட்கவில்லை என நினைத்து கிசுகிசு பேசினாலும் ஊரே கேட்கும் என்று கமலஹாசன் கூறுவதுடன் இந்த புரமோ வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ பிக் பாஸ் ரசிகர்களை பெரிய அளவில் எதிர் பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சூப்பர் சிங்கரில் இருந்து விலகிய ப்ரியங்கா: பிக்பாஸ் கன்பர்மா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினார்கள் என்பது தெரிந்ததே

ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை பிரியங்கா சோப்ரா… என்ன காரணம்?

“தி ஆக்டிவிஸ்ட்“ எனும் ரியால்டி ஷோவில் கலந்து கொண்டதற்காக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா

வடிவேலுவுடன் சந்தோஷ் நாராயணன் குடும்பத்தினர்: வைரல் புகைப்படங்கள்

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பதும், அவர் நடிக்க உள்ள திரைப்படத்தை சுராஜ் இயக்க இருக்கிறார் என்பதும்,

நீலக்கடலும் வெண்மேகமும்: மாளவிகா மோகன் பதிவு செய்த அட்டகாசமான புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை மாளவிகா மோகனன், அடுத்ததாக தனுஷ் நடித்து முடித்துள்ள 'மாறன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மாணவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி… உண்மையில் நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட ரூ.960