close
Choose your channels

இந்த வாரம் நாமினேஷன் படலத்தில் அதிரடி காட்டிய பிக்பாஸ்!

Monday, December 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன் வெளியான முதல் புரமோ வீடியோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேஷன் செய்பவரின் பெயரை எழுத வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து போட்டியாளர்கள் வரிசையாக நாமினேஷன் செய்பவரின் பெயரை எழுதுகின்றனர்.

இதனை அடுத்து நாமினேஷன் செய்யப்படுபவர்கள் குறித்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிடும்போது போட்டியாளர்கள் அனைவரையும் நான் நாமினேஷன் செய்கிறேன் என பிக்பாஸ் அறிவித்து அதிரடி காட்டினார். இதனை அடுத்து இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த எவிக்சன் பிராஸ்ஸில் சில சவால்கள் கொடுக்கப்படும் என்றும் அதில் வெற்றி பெறுபவர் சிலர் காப்பாற்றப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் தெரிவிக்கின்றார். மொத்தத்தில் வித்தியாசமாக இருக்கும் இந்த வாரம் எவிக்ஷன் பிராசஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.