close
Choose your channels

மாட்டுச்சாண டாஸ்க்கில் ஜெயித்து ஆட்டம் போடும் போட்டியாளர் யார் தெரியுமா?

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு சில கடினமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

நேற்று நடைபெற்ற பலூன் டாஸ்க்கில் மிக அபாரமாக விளையாடிய அக்சரா வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று மாட்டு சாணத்தில் காயின்களை தேடும் டாஸ்க் நடைபெறுகிறது. மாட்டுசாணம் உள்ள தொட்டியில் இறங்கி அதில் இருக்கும் காயின்களை அதிகமாக சேகரிப்பவர் வெற்றி பெறுவார் என பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இந்த டாஸ்க்கில் தாமரை, அமீர் மற்றும் அபினய் ஆகிய மூவரும் விளையாடுகின்றனர். இந்த டாஸ்க்கில் தாமரை அதிக காயின்களை சேகரித்து வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டு உடன் அவர் மாட்டுச்சாணத்துடன் கூடிய உடையுடன் தனது வெற்றியை டான்ஸ் ஆடி கொண்டாடுகிறார். இதனை அடுத்து இந்த வார நாமினேஷனில் இருந்து தாமரை காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.