பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த இரண்டு நடிகைகளா? கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் வெகு விரைவில் 6வது சீசன் தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இரண்டு தமிழ் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களாக தொகுப்பாளர் ரக்சன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி, தொகுப்பாளினி டிடி, பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநிதி உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதன்பின்னர் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் தர்ஷா குப்தா. மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் கவர்ச்சிகரமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அதேபோல் ’காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் இவரது கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே. இந்த இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

More News

நடிகர் அமிதாப்பச்சனுக்கு மீண்டும் கொரோனா: டுவிட்டரில் என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!

கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சனுக்கு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் இது குறித்து பதிவு செய்துள்ளார். 

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ரீஎண்ட்ரி ஆன விஜய்-சூர்யா பட நாயகி!

விஜய் மற்றும் சூர்யா உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார். 

ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தது விஜய் மகனா?

தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு விஜய்யின் மகன் கோரிக்கை வைத்ததாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. 

தம்பியை வரவேற்கிறேன்: 'இந்தியன் 2' படத்தின் நள்ளிரவு அறிவிப்புக்கு பின் கமல் டுவிட்!

 'இந்தியன் 2' படம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியான நிலையில் இந்த அறிவிப்புக்கு பின் தம்பி உதயநிதி ஸ்டாலினை வரவேற்கிறேன் என உலக நாயகன் கமல்ஹாசன் தனது

கெடுபிடிகள் அதிகரித்தும் விஜய்-ராஷ்மிகா ரொமான்ஸ் புகைப்படம் லீக்: அதிர்ச்சியில் 'வாரிசு' படக்குழு!

 தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்