close
Choose your channels

ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தது விஜய் மகனா?

Wednesday, August 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு விஜய்யின் மகன் கோரிக்கை வைத்ததாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது லீக் ஆகி வரும் நிலையில் படக்குழுவினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இருப்பினும் நேற்று விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் புகைப்படம் லீக் ஆகிய இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் தனது டுவிட்டர் பக்கத்தில் ,’வாரிசு’ படத்தின் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது சஞ்சய்யின் உண்மையான டுவிட்டர் பக்கம் அல்ல என்றும் விஜய் மகனுக்கு டுவிட்டர் உள்பட எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு எதுவும் இல்லை என்றும் விஜய் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.