பிக்பாஸ் தாமரை செல்வி நடிக்கும் படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாமரைச்செல்வி நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தாமரைச்செல்வி என்பதும் இவர் மிகவும் சிறப்பாக விளையாடி இறுதிவரை நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடப்பட்டது.

பிரியங்கா உள்ளிட்ட சக போட்டியாளர்களிடம் இவர் சண்டை போட்டாலும் உடனடியாக அந்த சண்டையை மறந்து அவர்களிடம் நட்பு பாராட்டும் குணம் கொண்டவர் என்பதும் வெள்ளந்தியான இவரது குணம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாமரைச்செல்வி அதன்பின்னர் பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் கணவருடன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் தாமரை செல்வி ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிக்கும் படங்களில் ஒன்று ‘ஆழி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தாமரை முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது இந்த படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'சூர்யா 42' குறித்த சூப்பர் தகவல் சொன்ன படக்குழுவினர்: வைரல் புகைப்படம்!

சூர்யா நடித்துவரும் 42வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

'காட்ஃபாதர்' படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி: என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் உருவான 'காட்ஃபாதர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும்

கார்த்தியின் 'சர்தார்' படத்தின் 'ஏறுமயிலேறி' பாடல் ரிலீஸ்!

கார்த்தி நடித்த 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும்

'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. மாஸ் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார் என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு நல்ல

'தளபதி 67' படத்தின் அறிவிப்பு எப்போது? லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தை விட தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பதும் இந்த படம் நிச்சயம் தமிழ் திரை உலகில் ஒரு