கே.எஸ்.ரவிகுமார் படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலங்கள்!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு பிரபலங்கள் கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
மலையாள திரையுலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கேஎஸ் ரவிக்குமார் பெற்றார் என்பதும் இந்த படத்தை அவருடைய உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் தர்ஷன் ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவருமே மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்பதும் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரே படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா ஜோடியாக நடிக்க இணைந்திருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது