பிக்பாஸ் தர்ஷன் முதல் படம் குறித்த தகவல்: வைரலாகும் வீடியோ!
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் மக்கள் மனதை வென்றவர் தர்ஷன் தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தர்ஷன் தனது முதல் பட அறிவிப்பு குறித்த தகவலை வீடியோ ஒன்றில் வெளியிட்டுள்ளார். இன்று தனக்கு ஒரு முக்கிய நாள் என்றும் முதல் படத்தில் இன்று தான் கையெழுத்திட்டதாகவும் முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரம்மாண்டமான டீம் கிடைக்க ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த படம் குறித்தும் இந்த டீம் குறித்தும் தகவல்களை தற்போது நான் வெளியிடப் போவதில்லை என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அப்போது நீங்களே இந்த டீம் குறித்து புரிந்து கொள்வீர்கள் என்றும் தர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
தர்ஷன் நடிக்க கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து ஏற்கனவே பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தகவல் வந்தது. அந்த படத்தின் அறிவிப்பு தான் வெளிவருமா? அல்லது புதிய டீமுடன் தர்ஷன் இணைகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்