close
Choose your channels

'வாரிசு' ஆடியோ விழாவை தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

Sunday, December 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ விழா வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த ஆடியோ விழாவை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான செட் அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த இசை வெளியீட்டு விழாவை பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமொகன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை ராஜூ தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆடியோ விழாவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos