'பிகில்' இசை வெளியிட்டின் அட்டகாசமான புதிய அப்டேட்!

  • IndiaGlitz, [Friday,September 13 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பிகில்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ள இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இம்மாதம் 22ஆம் தேதி ஞாயிறு அன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக சமீபத்தில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைப் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த இசை வெளியீட்டு விழா சன் டிவியில் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக சற்று முன் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரடியாக ஒளிபரப்பும் அன்று, டிஆர்பியில் ஒரு புதிய சாதனை ஏற்படுத்தும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

சுபஸ்ரீ விபத்தின் சிசிடிவி காட்சி! பல விமர்சனங்களுக்கு கிடைத்த விடை!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று கனடா செல்வதற்காக தேர்வு ஒன்றை எழுதிவிட்டு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தபோது

கவினை கன்னத்தில் அறைந்த பிரதீப் குறித்த பழைய 'செருப்பு' டுவீட் வைரல்!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் இந்த வாரம் வருகை தந்த நிலையில் கவின் வீட்டில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதும் அனைவரும் அறிந்ததே.

அதிரடி விஷால், பிகினி தமன்னா: 'ஆக்சன்' டீசர் விமர்சனம்

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'ஆக்சன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

தனுஷின் அடுத்த படத்தின் நாயகியாகும் மலையாள நடிகை!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' திரைப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நாயகியாக நடித்திருந்தார்

அமீர்கான் படத்தில் யோகிபாபு? அடித்தது அதிர்ஷ்டம்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் ஒரு படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவலை அமீர்கானை சமீபத்தில்