'பிகில்' படத்தின் அட்டகாசமான அப்டேட்டை தந்த அர்ச்சனா!

  • IndiaGlitz, [Wednesday,September 11 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் அப்டேட்டுக்கள் இந்த மாதம் அடிக்கடி வெளிவரும் என இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ஏற்கனவே கூறியிருந்தார்.

அந்த வகையில் சற்றுமுன் அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 'பிகில் படத்தின் தெலுங்கு மாநில உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த படம் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என்றும் பதிவு செய்துள்ளார்.

தீபாவளி அன்று பிரபல தெலுங்கு நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தளபதியின் 'பிகில்' தமிழ்ப்படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் இவ்வளவு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. அட்லி இயக்கி வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

விஜய்சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிருத்!

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதையும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது

டிசம்பரில் வெளியாகும் பிரபுதேவாவின் 'ஜல்லிக்கட்டு காளை

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபுதேவா தற்போது சல்மான்கான் நடித்து வரும் 'தபங் 3' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா! தந்தையின் கண்டிப்பால் அதிர்ச்சியில் லாஸ்லியா

பல வருடங்களாக சந்திக்காத லாஸ்லியாவின் தந்தை இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்து லாஸ்லியாவை சந்தித்தது குறித்து இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் பார்த்தோம்.

'தர்பார்' படத்தின் அட்டகாசமான அப்டேட்: கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்ப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

சமுத்திரக்கனியின் 'அடுத்த சாட்டை' சென்சார்-ரன்னிங் டைம் தகவல்கள்

சூர்யாவுடன் சமுத்திரக்கனி நடித்த 'காப்பான்'' திரைப்படம் வரும் 20ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் சமுத்திரக்கனியின் அடுத்த படமான 'அடுத்த சாட்டை'