போட்றா வெடியை: பிகில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 07 2019]

தளபதி விஜய், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நேரடியாக டிரைலரே வெளியாவதால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் டிரைலர் குறித்த ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் கொண்டாடி டிரெண்டாக்கி உள்ளனர்.

‘பிகில்’ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனவுடன் படத்தின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டிரைலரில் ’பிகில்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபுதேவாவின் அடுத்த படத்திற்கு ஆச்சரியமான டைட்டில்

நடிகர், இயக்குனர் , நடன இயக்குனர் பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு 'சார்லி சாப்ளின் 2', 'தேவி 2', ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் 'யங் மங் சங்'உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

'தளபதி 64' படப்பிடிப்பில் விஜய்: ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது

கொடுத்த வாக்குறுதியை மூன்றே மாதங்களில் நிறைவேற்றிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் கலைஞானம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டபோது, 'கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது

இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு 4 திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆயுத பூஜை என்பது ஒரு முக்கிய திருவிழாவாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு நான்கு திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள், வெளியாக உள்ளன 

ரஜினியின் '2.0' படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்த 'பிகில்'

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்'திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெகு விரைவில்