close
Choose your channels

போட்றா வெடியை: பிகில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, October 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நேரடியாக டிரைலரே வெளியாவதால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் டிரைலர் குறித்த ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் கொண்டாடி டிரெண்டாக்கி உள்ளனர்.

‘பிகில்’ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனவுடன் படத்தின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டிரைலரில் ’பிகில்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.