close
Choose your channels

உலக நாயகனாக இருந்தாலும் கமல் முட்டாள் தான்: எச்.ராஜா

Friday, April 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக பிரமுகர் எச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசன் உலக நாயகனாக சினிமாவில் இருந்தாலும் முட்டாள் தான் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா, ‘நடிப்பில் மட்டுமே கமல் பெரிய ஆள் என்றும் மற்றபடி பெரியாரை பின்பற்றுவதால் அவர் முட்டாள் தான் என்றும் கூறினார். வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர்கள், மொபைல் டாய்லெட் என எதைக் கண்டாலும் பயப்படும் இவரெல்லாம் ஒரு உலக நாயகனா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்

ஸ்டாலின் முட்டாள் என அனைவருக்கும் தெரியும், அதேபோல் பெரியாரை பின்பற்றுவதாகக் கூறும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என்றும் இன்றைக்கு முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

எச் ராஜாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் எச் ராஜாவின் இந்த விமர்சனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment