பாஜக ஆபத்தான கட்சிதான்: ரஜினிகாந்த் 

  • IndiaGlitz, [Monday,November 12 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி என்றால் அந்தளவுக்கு பாஜக ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி 'அப்படிதான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அப்போது கண்டிப்பாக அப்படித் தானே இருக்கும்' என்று கூறினார்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குறித்த கேள்விக்கு 'சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுவது அவசியம்' என்று ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, 'பணமதிப்பிழப்பு நீக்கத்தை சரியாக செயல்படுத்தவில்லை. அதை அமல்படுத்திய விதம் தவறு. அதைப்பற்றி விரிவாக பேச வேண்டியுள்ளது' என்று கூறினார்.

மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன் ன்று ரஜினிகாந்த் கூறினார்.

More News

சிம்புவுக்கு ரெட் கார்டு: சமூக வலைத்தளங்களில் பெருகும் ஆதரவு 

சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம்  ரெட் கார்டு போடப்போவதாக

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த் கோரிக்கை 

தருமபுரி சிட்லிங் மலைகிராம பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

விஜய் ரசிகர்களை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் தமிழக போலீஸ் 

கடந்த சில நாட்களுக்கு முன் சர்க்கார் பட போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்த கோபத்தில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் இரண்டு பேர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

பொங்கலுக்கு 'பேட்ட' பின்வாங்குவது ஏன்?

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படம் தள்ளிப்போகும் என தெரிகிறது 

அரசாங்கத்திற்கு விரோதமான காட்சி தவறுதான். சர்க்கார் விவகாரம் குறித்து பவர் ஸ்டார்

சர்க்கார் விவகாரம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர்  பவர் ஸ்டார் சீனிவாசன் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது: