close
Choose your channels

பொங்கலுக்கு 'பேட்ட' பின்வாங்குவது ஏன்?

Monday, November 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படம் தள்ளிப்போகும் என தெரிகிறது .

ரஜினிகாந்த் நடித்த '2.0' திட்டமிட்டபடி வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியானால், ஒன்றரை மாத இடைவெளியில் இன்னொரு சூப்பர் ஸ்டார் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரும்பவில்லை என்றும், அதனால் 'பேட்ட' படம் பிப்ரவரி அல்லது ஏப்ரலுக்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் பொங்கல் அன்று தல அஜித்தின் 'விஸ்வாசம்' சோலோவாக வெளியாக வாய்ப்பு உள்ளது.

தாதா வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.