கொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய பாஜக பிரமுகர்!!!

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மக்களிடம் காணப்படுகின்ற அச்சத்தைப் போக்கும் விதமாகவும் மேலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் ஏப்ரல் 5 ஆம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விளக்கேற்றுங்கள் எனப் பிரதமர் கூறியிருந்தார். பிரதமரின் இந்த அழைப்புக்கு பலத் தரப்புகளில் இருந்து, கடுமையான எதிர் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் மக்கள் இந்த அறிவிப்பை பெரும்பாலும் பின்பற்றி நடந்தனர்.

“மின் விளக்குகள் ஏற்றுங்கள” எனப் பிரதமர் கூறியதைத் தவறாக புரிந்து கொண்ட சில அதிக பிரசிங்கிகள் பட்டாசுகளை வெடித்து சில விபரீதங்களையும் அரங்கேற்றினர். சென்னையில் பட்டாசு வெடித்த விபத்தில் பெரும் தீ பரவியது. பின்னர் தீயணைப்பு துறையின் உதவியால் அணைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் ஜெய்பபூரில் இதே போன்ற தீவிபத்து நிகழ்ந்தது.

இந்த விபரீதங்களுக்கு மத்தியில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் கொரோனாவை விரட்டியடித்த  நிகழ்ச்சிதான் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் பல்ராம்பூர் தொகுதியின் தலைவர் மஞ்சித் திவாரி பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அகல் விளக்கை ஏற்றியுள்ளார். பின்னர் அதே கையில் கைத் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். பின்னணி இசையாக go corona go என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கோசம் எழுப்ப, மஞ்சித் திவாரி கொரோனாவை அழித்த பெருமிதத்தில் திளைத்து இருக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பலரது விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது

More News

அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு தெருக்களில் வீசப்படும் கொரோனா பிணங்கள்!!!  ஈக்வடார் சந்தித்துவரும் நெருக்கடி!!!

பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத ஈக்வடார் கொரோனா பாதிப்பினால் கடும் நெருக்கடி நிலைமையை சந்தித்துவருகிறது.

ரஜினியுடன் அமிதாப், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி நடித்த படம் இன்று ரிலீஸ்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும்

கொரோனாவுக்கு பயந்து, தற்கொலை செய்துகொண்ட கால்பந்து அணியின் மருத்துவர்!!!

பிரெஞ்சு, கால்பந்து Ligue 1 Club Reims அணியின் மருத்துவர் கோன்சலஸ் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல இசையமைப்பாளர் காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர்!

இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல்முறையாக வாய்ப்பு கொடுத்த பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 85.

15 வருடங்கள் கழித்தும் பாராட்டை பெற்ற விஜய் படம்: இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் உள்ள அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டாலும், முன்பை விட அதிக லாபம் தரும் ஒரே தொழிலாக ஊடகங்கள் உள்ளன