இளையதளபதியிடம் வாழ்த்து பெற்ற இளம் இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,March 05 2017]

தமிழ் சினிமாவில கடந்த சில வருடங்களாக உலக தரத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த துறைக்கு புதியதாக வந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வித்தியாசமான சிந்தனையுடன் வரும் இளம் இயக்குனர்கள் நவீன டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தி உலக தரத்தில் திரைக்கதை அமைத்து படம் இயக்கி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் 'துருவங்கள் 16' மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. கதை சொல்வதில் புதுமை, வித்தியாசமான திரைக்கதை, காட்சி அமைப்புகளின் கோர்வை, சரியான நடிகர்களின் தேர்வு, கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் படத்தை கொண்டு சென்ற பாணி ஆகியவற்றை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

இந்நிலையில் 'துருவங்கள் 16' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த இளையதளபதி விஜய் உடனே இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளர். 'புத்திசாலித்தனமான பணி. உங்கள் பாணியை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்' என்று பாராட்டியுள்ளார். இந்த தகவலை கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

திறமை உள்ளவர்களை தயங்காமல் பாராட்டு வழக்கம் உடைய விஜய், கார்த்திக் நரேனுக்கு தெரிவித்த இந்த பாராட்டால், கார்த்திக் நரேன் அடுத்த படத்தில் தனது அசுர பலத்தை காட்டுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

"Brilliant job man. Really liked the way you treated the emotions. Best wishes for your future".The caller was 'Ilayathalapathy vijay' sir 😱

— Karthick Naren (@karthicknaren_M) March 4, 2017

More News

இளையதளபதியிடம் வாழ்த்து பெற்ற இளம் இயக்குனர்

தமிழ் சினிமாவில கடந்த சில வருடங்களாக உலக தரத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த துறைக்கு புதியதாக வந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது...

இயக்குனர் செல்வரகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கோணத்தில் கதை கூறினால் மட்டுமே பீல்டில் நிலைக்க முடியும் என்ற நிலையில் தனக்கென ஒரு பாணியுடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இயக்குனர் செல்வராகவன்...

விஜய்மில்டனுக்கு சூர்யா செய்த உதவி

கோலிவுட்டின் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய விஜய் மில்டன், 'கோலி சோடா' என்ற படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குனர் என்பதையும் நிரூபித்தார்

சின்மயி கணவருக்கு ஆதரவு தெரிவித்த சமந்தா

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அதில் கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டதை பார்த்த்தோம்.

இளையதளபதியின் 'விஜய் 61' படத்தில் ஷங்கர் பட வில்லன்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'விஜய் 61'