அப்துல் கலாமுக்கு சமர்ப்பணம் செய்யும் 'கோ 2' படக்குழுவினர்

  • IndiaGlitz, [Wednesday,August 12 2015]

பாபிசிம்ஹா நடித்து வரும் "கோ 2" படக்குழுவினர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு ஒரு பாடலை விரைவில் சமர்ப்பணம் செய்யவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர்களிடம் உதவியாளராக இருந்த இந்த படத்தின் இசையமைப்பாளர் லியோ ஜேம்ஸ் வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சிங்கிள் பாடலை ரிலீஸ் செய்யவுள்ளார்.

தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமார் எழுதியுள்ள இந்த பாடல் "உன்னை மாற்றினால்" என்று தொடங்குகிறது. இந்த உலகத்தை நீ மாற்ற விரும்பினால் உன்னை நீ முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்' என்ற அப்துல்கலாமின் கருத்தை வலியுறுத்துவதாக அமைந்திருக்கும் இந்த பாடலை அவர்க்கு சமர்ப்பிப்பதில் பெருமைப்படுவதாக லியோ ஜேம்ஸ் கூறியுள்ளார். இந்த பாடலை ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார்.

பாலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் 'கோ 2' படத்தில் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், 'டார்லிங்' நாயகி நிகில்கல்ரானி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பாபிசிம்ஹா பத்திரிகை ரிப்போர்ட்டராகவும், பிரகாஷ்ராஜ் அரசியல்வாதியாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிலிப் சுந்தர் ஒளிப்பதிவும், அந்தோணி எல்.ரூபன் அவர்கள் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'விஜய் 59' படத்தில் எம்.ஜி.ஆர் பாடல்கள்?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது...

VSOP நடிகைக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி திடீர் திருமணம்.

பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த 'தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை பானு...

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியின் செளகார்பேட்டை யின் இந்தி டைட்டில்

கடந்த சில மாதங்களாக பேய்ப்பட சீசனில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமா உலகின் அடுத்த பேய்ப்படம் 'செளகார்பேட்டை". இரண்டு வேடங்களில் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி, விவேக்...

அதர்வா நடிக்கும் 'ருக்குமணி வண்டி வருது' படத்தின் கதை?

அதர்வா, ஆனந்தி நடிப்பில் கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட 'சண்டிவீரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

அஜீத்-விஜய் இயக்குனர் படத்தில் வில்லனாகும் பார்த்திபன்

விஜய், அஜீத், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி கொடுத்த இயக்குனர் பேரரசு கடந்த சில வருடங்களாக படங்கள் எதையும் இயக்காமல் இருந்தாலும்...