ரஜினியை அடுத்து 'மேன் Vs வைல்டு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர்!

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மேன் Vs வைல்டு என்ற நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் அந்த நிகழ்ச்சிகள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்

மேன் Vs வைல்டு என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களின் அனுபவத்தை வீடியோவாக எடுத்து டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் என்பது தெரிந்தது. பியர் கிசில்ஸ் என்பவர் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பதும் இந்தியாவை பொருத்தவரை பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் உள்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாலத்தீவு நாட்டில் உள்ள காட்டில் இந்த நிகழ்ச்சியின் படப்ப்பிடிப்பு நேற்று நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் விதவிதமான விலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள் ஆகியவை இருக்கும் காட்டுக்குள் பிரபலங்கள் இணைந்து பயணம் செய்யும்  திகில் காட்சிகளை மக்களுக்கு வழங்குவது என்பதாகும்.  தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் டப் செய்து ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

More News

மீண்டு வரும் யாஷிகா: லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பதும், அதன் பின் அவர் மருத்துவ சிகிச்சை

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா: வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என காமெடி நடிகர் வடிவேலுவுக்கு பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பீஸ்ட், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மெகா பிளான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களின் ரிலீஸ் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா பிளான் செய்துள்ளதாக

அமெரிக்க ஒபன் கோப்பையை வென்ற 18 வயது வீராங்கனை… குவியும் வாழ்த்து!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் 18 வயதான பிரிட்டன் விராங்கனை எம்மா ரடுகானு.

தமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு வழங்கப்படும்? ஏன் இந்த சலுகை?

தமிழ்நாட்டின் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசியபோது, தமிழகத்தில் ஆறு,