close
Choose your channels

பீஸ்ட், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மெகா பிளான்!

Sunday, September 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ மற்றும் சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களின் ரிலீஸ் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா பிளான் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தீபாவளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே தினத்தில் அஜித்தின் ’வலிமை’ மற்றும் சிம்புவின் ’மாநாடு’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ’அண்ணாத்த’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ்க்கு பின்னரே ’பீஸ்ட்’ மற்றும் ’எதற்கும் துணிந்தவன்’ படங்களின் புரமோஷன் பணிகளை தொடங்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ’அண்ணாத்த’ ரிலீசுக்கு பின்னர் டிசம்பரில் ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் ஜனவரி பொங்கல் தினத்தில் ’பீஸ்ட்’ ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதால் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் பிரபலங்களின் படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.