close
Choose your channels

பிரபல நடிகை கார் விபத்தில் மரணம்.. வருங்கால கணவருடன் சென்றபோது ஏற்பட்ட சோகம்..!

Wednesday, May 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தனது வருங்கால கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து காரணமாக காலமானார்.

பிரபல நடிகை ஒருவர் தனது வருங்கால கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை காலமானதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் ’சாராபாய் vs சாராபாய்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான நடிகை வைபவி உபாத்தியாயா. அதன் பின்னர் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல பிரதேசத்துக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் வைபவி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவரது வருங்கால கணவரின் நிலை என்ன என்று தகவல் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

நடிகை வைபவி மறைவிற்கு பாலிவுட் மற்றும் சின்னத்திரையுலகினர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் விரைவில் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு அதன் பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos