close
Choose your channels

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற போண்டாமணி மகள்: கூப்பிட்டு கல்லூரி சீட் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்..

Wednesday, May 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் போண்டா மணியின் மகள் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனது கல்லூரியில் அவருடைய மகளை கூப்பிட்டு அவர் விரும்பிய பாடத்திற்கான சீட்டை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமணி என்பதும் இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் போண்டாமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பல பிரபலங்கள் அவருக்கு நிதி உதவி செய்தனர் குறிப்பாக விஜய் சேதுபதி, தனுஷ், உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த அளவு நிதி உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போண்டா மணியின் மகள் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில் அவர் 600க்கு 400 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மருத்துவ செலவு காரணமாக மகளின் மேல் படிப்பு செலவு செய்ய முடியாத நிலையில் போண்டாமணி இருந்தார். இது குறித்து தகவல் கேள்விப்பட்ட பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன்னுடைய வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் போண்டா மணியின் மகள் விரும்பிய பிசிஏ சீட் கொடுத்தார்.

மேலும் அவருடைய மேல் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போண்டா மணி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment