'வாரிசு' டிரைலர் ரிலீசான ஒரு மணி நேரத்தில் போனிகபூர் தந்த 'துணிவு' அப்டேட்

  • IndiaGlitz, [Wednesday,January 04 2023]

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி அல்லது ஒரு நாள் முன்பாக ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

அஜித் நடித்த 'துணிவு’ மற்றும் விஜய் நடித்த 'வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை செய்தியாக இருந்தது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக 'துணிவு’ திரைப்படம் ஒரு நாள் முன்பாக அதாவது ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என செய்திகள் கசிந்த நிலையில் சற்று முன் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் 'வாரிசு’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியான டிரெய்லரில் கூட படக்குழுவினர் அறிவிக்காத நிலையில் 'வாரிசு’ படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகுமா? அல்லது திட்டமிட்டபடி ஜனவரி 12ஆம் தேதி வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

47 வயது பாக்யராஜ் பட நாயகிக்கு மறுமணமா? அவரே  அளித்த விளக்கம்!

பாக்யராஜ் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்த நடிகை ஒருவர் 47 வயதில் திருமணமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

அன்போ, அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடு: 'வாரிசு' டிரைலர்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் உலகம் முழுவதும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனிமேல் இதை செஞ்சிங்கன்னா வெளியே அனுப்பிவிடுவேன்: ஏடிகேவை எச்சரித்த  பிக்பாஸ்

 இனிமேல் இதை செய்தால் உங்களை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என பிக்பாஸ், போட்டியாளர்களில் ஒருவரான ஏடிகேவுக்கு எச்சரிக்கை செய்தது பெரும்

காங்கிரஸ் எம்.எல்.ஏ, காஸ்ட்யூம் டிசைனர் கணவர் மாரடைப்பால் மரணம்!

காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் கணவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குபவர் இந்த இயக்குனரா? படப்பிடிப்பு எப்போது?

நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு ’பொன்னியின் செல்வன்’ ‘விருமன்’ மற்றும் ’சர்தார்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகி மூன்று மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.