close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குபவர் இந்த இயக்குனரா? படப்பிடிப்பு எப்போது?

Wednesday, January 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு ’பொன்னியின் செல்வன்’ ‘விருமன்’ மற்றும் ’சர்தார்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகி மூன்று மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு அவரது நடிப்பில் ’பொன்னியின் செல்வன் 2’, ’ஜப்பான்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி அவர் இந்த ஆண்டு ‘கைதி 2’ படத்திலும் நடிக்கவுள்ளார்.



இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தை நலன் குமாரசாமி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதி நடித்த ‘சூதுகவ்வும்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி கார்த்திக்காக கதை ஒன்றை கூறியுள்ளதாகவும் இந்த கதையில் நடிக்க கார்த்தி ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 20ஆம் தேதி பூஜையுடன் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.