உலகின் 3 ஆவது பெரிய வைரம் கண்டுப்பிடிப்பு… எடையைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்…

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

தென் ஆப்பிரிக்கா நாடான போஸ்வானா நாட்டில் தற்போது உலகின் 3 பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன் எடை 1,098 கேரட் எனவும் இந்த வைரம் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு ஏலம் விடப்பட்டு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வைரம் அதிகமாக உற்பத்தியாகும் போஸ்வானா நாட்டில் இதற்கு முன்பு கடந்த 2016 ஆம் ஆண்டு 1109 கேரட் எடை அளவிற்கு வைரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரமே உலகின் இரண்டாவது பெரிய வைரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் 3,106 கேரட் அளவிற்கு வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரமே உலகின் பெரிய வைரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி வைரம், தங்கம், கிரானைட், கனிமங்கள் எனத் தொடர்ந்து இயற்கை வளங்கள் கொட்டி கிடந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் பொருளாதாரம் படு மோசமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கொடிய வறுமையின் காரணமாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு நடால் மாகாணத்தில் உள்ள குவாகஹ்தி பகுதியில் பல ஆயிக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி தங்கத்தை தேடியதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

More News

'தளபதி 65' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

டெல்லியில் தோனியை சந்தித்த தமிழக அமைச்சர்: வைரல் புகைப்படம்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று டெல்லி சென்றார் என்பதும் அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்தினார் என்பதும் தெரிந்ததே.

13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியர்களின் பணம் அந்நாட்டு வங்கிகளில் குவிந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

USஇல் கடந்த 2019 ஆம் ஆண்டே கொரோனா பாதிப்பு இருந்தது? வெளியான பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டே அமெரிக்காவின் 5 முக்கிய மாகாணங்களில் 7 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக சீனாவை சேர்ந்த தொற்றுநோயியல்

அப்பாக்களின் தினம்… இறுக்கத்தை விட்டு vaarta உடன் கொண்டாடுங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும் அப்பா எனும் ஒரு நபர் அந்த குடும்பத்தின் தூணாகவே இருந்து செயல்படுகிறார்.