தந்தை மறைவுக்கு பின் பள்ளி சென்ற 5 வயது சிறுவனுக்கு அணிவகுப்பு மரியாதை

  • IndiaGlitz, [Wednesday,May 16 2018]

அமெரிக்காவை சேர்ந்த இண்டியானா என்ற பகுதியில் கடந்த 4ஆம் தேதி காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில் மறைந்த காவல்துறை அதிகாரியின் 5 வயது மகன் முதல்முறையாக பள்ளிக்கு செல்லும்போது அந்த சிறுவனை வழியனுப்ப 70 காவல்துறையை சேர்ந்தவர்கள் அணிவகுப்பு மரியாதை செய்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை மறைவிற்கு பின்னர் பள்ளி செல்ல மறுத்த அந்த சிறுவன், தனக்கு துணையாக ஒரே ஒரு போலீஸ் அதிகாரியாவது வரவேண்டும் என்று தாயாரிடம் கூறியதாகவும், இதனை அறிந்த இண்டியானா காவல்துறை 70 காவல்துறையினர்களை அனுப்பி, அந்த சிறுவனை பள்ளிக்கு வழியனுப்பி வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒரு அதிகாரி தன்னுடைய சீருடை மற்றும் பேட்ஜை அந்த சிறுவனிடம் கொடுத்து கெளரவப்படுத்தினார். தந்தையை இழந்த அந்த சிறுவனுக்கு தாங்கள் அனைவரும் தந்தையாக இருப்போம் என்று அவர்கள் எடுத்து கொண்ட உறுதிமொழி அனைவரையும் கண்கலங்க வைத்தது
 

More News

பிரபல நடிகருடன் இணைந்து செயல்பட நாஞ்சில் சம்பத் முடிவு

அரசியலில் அவ்வப்போது பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தி வருபவர் நாஞ்சில் சம்பத் என்பது தெரிந்ததே. தினகரன் அணிக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்து கொண்டிருந்த அவர்

கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த கேரளாவின் கூவத்தூர் ரிசார்ட்ஸ்

ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லையென்றால் எம்.எல்.ஏக்கள் கிடைக்கும் வரை இருக்கும் எம்.எல்.ஏக்களை

ஊருக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய சிறுத்தை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

 வால்பாறை அருகே பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்து தாக்கிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழப்பு

நம்மூரில் ஒருசில லட்டர்பேட் அரசியல் கட்சி தலைவர்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று சென்னையில் காலமானார் அவரது மறைவு தமிழ் எழுத்துலகிலும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.