ரஜினி படம் பார்த்ததால் குணமான இதயநோய் சிறுவன்: டாக்டர்கள் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

பெங்களூரை சேர்ந்த சிறுவனுக்கு சமீபத்தில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் தொடர்ந்து ரஜினி படத்தை பார்த்ததால் விரைவில் குணமானதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு பெங்களூரை சேர்ந்த 13 வயது சிறுவன் குஷால் என்பவருக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவருக்கு இதயமாற்று சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். கடந்த மாதம் 6ஆம் தேதி பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு நான்கு மணி நேர இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

சிறுவன் குஷால் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்பதால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து அவர் ரஜினி படங்களை பார்த்ததாகவும், இதன் காரணமாக அவர் வலியை மறந்ததுடன், விரைவில் குணமாகியதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.

More News

சோபியாவின் டுவிட்டர் பக்கம் திடீர் மாயம்

சென்னை-தூத்துகுடி விமானத்தில் சாதாரண சின்ன சண்டையாக ஆரம்பித்த தமிழிசை-சோபியா விவகாரம் அதன் பின்னர் காவல்துறையில் புகார், கைது, இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான டிரெண்ட்

சோபியா விடுதலைப்புலியா? சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம்

கனடாவில் விடுதலைப்புலிகள் அதிகம் இருப்பதால் கனடவில் படித்து கொண்டிருக்கும் சோபியாவும் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பராமரிப்பு இல்லாததால் சரிந்து விழுந்த மேம்பாலம்: கொல்கத்தாவில் பரபரப்பு

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 1970ஆம் ஆண்டு கட்டிய பாலம் ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்ததால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளது.

விஜய், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்த கேரள அமைச்சர்

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் அம்மாநிலமே பெருந்துன்பத்தில் மூழ்கியிருந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியது நடிகர் சூர்யாதான்

சோபியா ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

சோபியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.