close
Choose your channels

டாப்லெஸ் போஸ் கொடுத்த ஹீரோயின்.. புகைப்படத்தை பகிர்ந்த பிரபல ஹீரோ..!

Friday, January 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை அந்த படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்முட்டி என்பதும் இவர் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ’பிரம்மயுகம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மம்மூட்டியின் பர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது நாயகியின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் நாயகியாக அமல்டா லிஸ் என்பவர் நடித்து வரும் நிலையில் அவர் மேலாடை அணியாமல் பழங்குடியின பெண் கேரக்டரில் நடித்திருந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலாடை அணியாமல் தலை முடியை மட்டுமே முன்பக்கமாக மறைத்து உள்ள இந்த புகைப்படத்தை மம்மூட்டி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இந்த படத்தின் நாயகி இவர்தான் என்று அறிமுகம் செய்துள்ளார்.

ராகுல் சதாசிவன் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர்கள் எல்லாம் கருப்பு வெள்ளை நிறத்தில் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஹாரர் படமாக இந்த படம் உருவாகி வருவதாகவும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.