சேலை கட்டிவந்த மாப்பிள்ளை, வேட்டி உடுத்திய பெண்ணுடன் செய்யும் வினோதத் திருமணம்!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்து வரும் கும்மா எனும் குடும்பப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் திருமணத்தின்போது சில விசித்திர நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

பொதுவா திருமணத்தின்போது மணப்பெண் சேலை அணிந்து அலங்காரம் செய்து கொள்வார். ஆனால் இந்த குடும்பத்தில் மட்டும் மாப்பிள்ளை சேலை அணிந்து தன்னை ஒரு பெண்போல அலங்கரித்து கொள்வாராம். அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் கும்மா வீட்டு திருமணத்தில் ஒரு மாப்பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டுமாம். கூடவே மணப்பெண் வேட்டி உடுத்தி மிடுக்கான தோற்றத்தில் இருப்பாராம்.

இப்படி இருவரும் மாறி மாறி வேடம் போட்டுக்கொண்டு தங்களது குலத் தெய்வத்தை வணங்கி வழிபட்ட பின்பு மாப்பிள்ளை, மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவாராம். காலம் காலமாக பின்பற்றி வருவதாகக் கூறப்படும் இந்த வழக்கத்தை மீறி அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லையாம்.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செல்லோபள்ளி, மர்காபுரம், தரிமடுகு, அர்த்தவீடு, கம்பம், போன்ற ஊர்களில் இந்த குல வழக்கத்தை பின்பற்றித்தான் தற்போதுவரை திருமணம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. நாகரிகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் இதுபோன்ற திருமணங்கள் நமக்கு விசித்திரமாகவே தோன்றுகிறது.
 

More News

கொரோனாவை ஒருசில வினாடிகளில் கண்டறியும் ஃபேஷியல் ஸ்கேனர், மாஸ்க்… அசத்தும் புது வரவு!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று இன்றுவரை உலகம் முழுவதும்

இந்த குட்டி பாப்பாக்களில் மஞ்சிமா மோகன் யார்? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பின்னர் அவர் 'சத்ரியன்' 'இப்படை வெல்லும்' 'தேவராட்டம்'

பப்ஜி காஸ்ட்யூமில் இருக்கும் இந்த தமிழ் நடிகர் யார்?

பப்ஜி காஸ்ட்யூமில் பிரபல நடிகர் ஒருவர் போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

கிருத்திகா உதயநிதி படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்: யார் யார் தெரியுமா?

வணக்கம் சென்னை, காளி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்ததாக ஓடிடி பிளாட்பாரத்திற்கு ஆக ஒரு வெப்திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் அதிகாரபூர்வ

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்: தயாரிப்பாளர் யார் தெரியும?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.