பப்ஜி காஸ்ட்யூமில் இருக்கும் இந்த தமிழ் நடிகர் யார்?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பப்ஜி காஸ்ட்யூமில் பிரபல நடிகர் ஒருவர் போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் காமெடி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் மொட்ட ராஜேந்திரன். இவரது வித்தியாசமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற பாலா இயக்கிய ’நான் கடவுள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற மொட்டை ராஜேந்திரன், விஜய், அஜீத் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பப்ஜி காஸ்டியூமில் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் அட்டகாசமாக உள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.