ஒரே ஆட்டத்தில் ரசிகர்களை மிரட்டிவிட்ட இந்திய வீரர்… கொண்டாடும் ரசிகர்கள்!

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் மேட்சில் இந்திய இளம் வீரர் ஷர்துல் தாகூர் வெறும் 31 பந்துகளில் அரைச்சதத்தை அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இதனால் 32 பந்துகளில் அரைச்சதம் அடித்த ஷேவாக்கின் சாதனையை அவர் முறியடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டர் பேட்ஸ் மேனான ஷர்துல் தாகூர் டெஸ்ட் மேட்சில் அதுவும் 31 பந்துகளில் அரைச்சதம் அடித்ததைப் பார்த்து மூத்த வீரர்கள் பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் கபில்தேவ் அவர்கள் 30 பந்துகளில் அரைச்சதத்தை அடித்து அசர வைத்திருந்தார். தற்போது இளம்வீரர் அந்தச் சாதனையை நெருங்கி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கிய 4 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய முதல் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் படு சொதப்பலாக ஆடி சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இதில் ரோஹித் சர்மா 11 ரன்களுக்கும் லோகேஷ் ராகுல் 17 ரன்களுக்கும் புஜாரா 4 ரன்களுக்கும் ஜடேஜா 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அதையடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி அரைசதம் அடித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய துணை கேப்டன் ராஹானே 14 ரன்களுக்கும் ரிஷப் பண்ட் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 130 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக சுருண்டுவிடும் எனக் கணிக்கப்பட்டது.

இப்படியிருந்த நிலையில் களம் இறங்கியவர்தான் ஷர்துல் தாகூர். இவர் 36 பந்துகளை சந்தித்து 57 ரன்களை அசால்ட்டாகக் குவித்தார். இவருடன் ஜோடி போட்ட உமேஷ் யாதவ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் ஷர்துல் தாகூர் செய்த காரியத்தைப் பார்த்துதான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கடும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசும் இங்கிலாந்து வீரர்… மிரண்டுபோன ரசிகர்கள்!

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.

தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு மீண்டும் வெண்கலம்! குவியும் வாழ்த்துக்கள்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு இன்று வெண்கல பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

தமிழர் அடையாளங்களை மாற்றுவது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சம்.....! சீமான் காட்டம்...!

தமிழ் நூல்களுக்கு, 'திராவிடக் களஞ்சியம்' என பெயர்  வைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

என் குழந்தைக்கு பிறந்தநாள்… செம ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஐஸ்வர்யா மேனனின் வொர்க்-அவுட் வீடியோ: குவியும் லைக்ஸ்கள்

தமிழ் நடிகையான ஐஸ்வர்யா மேனன் ஒர்க்அவுட் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்தே இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.