ஒரு குழந்தையின் உயிரைக் காக்க 16 கோடி ரூபாய் மருந்து! ஜிஎஸ்டி விலக்கு அளித்த பிரதமர் மோடி!

மும்பையில் பிறந்த ஒரு 5 மாதக் குழந்தைக்கு விசித்திரமான ஜெனடிக் நோய் ஏற்பட்டு இருக்கிறது. இந்நோய்க்கான சிகிச்சை மருந்து மட்டும் இந்திய மதிப்பில் ரூ.16 கோடி எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும்போது அதற்கான இறக்குமதி வரி மற்றும் 12% ஜிஎஸ்டி வரியைச் சேர்த்தால் மேலும் 6 கோடி ரூபாய் செலவு ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஹாராஷ்டிராவின் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இக்குழந்தையின் பெற்றோர் பிரியங்கா மற்றும் மஹிர் தற்போது சமூக வலைத்தளம் மூலமாக கிரவுண்ட் பண்டிங் செய்து வருகின்றனர். இதுவரை 12 கோடியை வசூலித்து உள்ள நிலையில் பிரியங்கா மற்றும் மஹிர் ஆகிய இருவரும் சமூக வலைத்தளத்தில் வரியை குறைக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும் இவர்கள் டிவிட்டரில் பிரதமர் மோடியை டேக் செய்து தன்னுடைய குழந்தையின் மரபணு சிகிச்சை குறித்தும், இது உயிர்க்காக்கும் மருந்து என்ற நிலையில் இல்லாததால் வரி விதிக்கப்படுவது குறித்தும் பதிவிட்டு உள்ளனர். இந்தப் பதிவை பார்த்த பிரதமர் மோடி குழந்தை டீராவிற்கு உதவ முன்வந்துள்ளார். இதனால் தற்போது ரூ.16 கோடி மதிப்பிலான உயிர்க்காக்கும் மருந்திற்கு அனைத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரிஷப் பந்த்-னா எனக்கு பயம்… மனம் திறக்கும் இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன் விதிதியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது.

மோசமான பிட்ச் இதுதான்… இந்திய பிட்சை குறித்து இங்கிலாந்து வீரரின் பகீர் குற்றச்சாட்டு!

சென்னை சேப்பாக்கதில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றது என்ற தகவல் பெரும்பாலானோருக்குத் தெரிந்த ஒன்றுதான்

உசைன் போல்டுக்கு கிரிக்கெட் வருமா? வைரல் வீடியோவை பார்த்து ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்!

உலகின் அதிவேக மனிதனாகக் கருதப்படும் தடகள வீரர் உசைன் போல்ட் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

வசந்தபாலன் அடுத்த படத்தில் ஹீரோவாகும் 'மாஸ்டர்' நடிகர்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்தபாலன், 'ஆல்பம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னரும் காவியத்தலைவன்,  அங்காடித்தெரு, ஜெயில்

ஒரே ஒரு நிகழ்ச்சியால் புகழின் உச்சிக்கு சென்ற புகழ்!

'குக் வித் கோமாளி என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று உள்ள புகழ் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது