close
Choose your channels

வசந்தபாலன் அடுத்த படத்தில் ஹீரோவாகும் 'மாஸ்டர்' நடிகர்!

Friday, February 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்தபாலன், ‘ஆல்பம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னரும் காவியத்தலைவன், அங்காடித்தெரு, ஜெயில் போன்ற படங்களை இயக்கினார் என்பதும், வசந்தபாலன் இயக்கி உள்ள ’ஜெயில்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தான் படித்த விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய வசந்தபாலன் இந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று வசந்தபாலன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.