close
Choose your channels

வானத்தில் ஒய்யாரமாக பறக்கும் கார் … அசத்தும் புது கண்டுபிடிப்பு!!!

Saturday, October 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வானத்தில் ஒய்யாரமாக பறக்கும் கார் … அசத்தும் புது கண்டுபிடிப்பு!!!

 

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கார் வெறுமனே 3 நிமிடத்தில் வானத்தில் பறக்கக்கூடிய ஏர் விமானமாக மாறமுடியும். அப்படி ஒரு ஏர் காரை ஸ்லோவாக்கியாவில் உள்ள ஸ்டீபன் கிளீன் எனும் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதற்கு முன்பாக வானத்தில் பறக்கும் சில ஏர் கார்கள் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதைவிட அதிக தூரம் பயணிக்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வடிவமைக்கத் தொடங்கப்பட்ட இந்த இயந்திரம் தற்போது வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஸ்லோவாக்கியாவின் பியஸ்டனி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட இந்த கார் 1500 அடி உயரத்தில் பறந்து வெற்றிகரமாக தனது சோதனையை முடித்துக் கொண்டது. மனிதக் கண்டுபிடிப்பின் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த இந்த விமானக் கார் எதிர்காலத்தில் சுயமாக இயக்கும் வகையிலும் அதே நேரத்தில் தனிநபர் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலும் கொண்டு வரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் மற்ற எர் கார்களைப்போல இல்லாமல் இந்த விமானம் 1500 அடி உயரம் வரையிலும் பறக்கக் கூடியது. 1,100 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தில் 2 இருக்கைகள் பொருத்தப் பட்டுள்ளன. அதேபோல இந்த விமானத்தில் 200 கிலோ எடைக் கொண்ட பொருளையும் ஏற்றிச் செல்ல முடியும்.

பேராசிரியர் ஸ்டீபன் கிளீன் என்பவர் இந்த ஐந்தாவது தலைமுறை பறக்கும் கார் விமானத்தை உருவாக்கி இருககிறார். மேலும் இது மிகக் குறைந்த தூரத்தில் உள்ள ஓடுதளத்தில் இருந்தும் இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஎம்டபிள்யூ 1.6 எல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் இந்தக் கார் விமானம் 140 ஹெச்பி திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 1000 கி.மீ துரம் வரை இந்த கார் விமானத்தில் பயணிக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.