AI தொழில்நுட்பம் செய்த வேலையை பார்த்தீங்களா? செயற்கை காதலியோடு உரையாடும் புது சேவை!

  • IndiaGlitz, [Friday,May 19 2023]

AI தொழில்நுட்பம் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைக் கண்டு உலகமே அச்சம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு விர்ச்சுவல் ரியாலிட்டியில் உருவாக்கப்பட்ட காதலியுடன் உரையாடும் சேவை ஒன்றை சோஷியல் மீடியா பிரபலம் ஒருவர் உருவாக்கி இருக்கிறார்.

சோஷியல் மீடியா பிரபலமாக இருந்துவரும் கேரின் மார்ஜோரி என்பவர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புது விர்ச்சுவல் காதலி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். CarynAI எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த விர்ச்சுவல் காதலியோடு நீங்கள் உரையாட முடியும். உங்களது தனிப்பட்ட கேள்விகளையும் பாலுறவு சார்ந்த உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் எந்த கேள்விகளைக் கேட்டாலும் விர்ச்சுவல் காதலி ஒரு உண்மையான பெண்ணைப் போன்ற குரலில் பதிலளிக்கும்.

மேலும் இதற்கு நிஜமான பெண்ணைப் போன்ற ஒரு தோற்றமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெலிகிராமில் தற்போது அளிக்கப்பட்டு வரும் இந்த சேவைக்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சேவையைப் பார்த்துதான் தற்போது இணையவாசிகள் பலரும் மிரண்டு போய் இருக்கின்றனர்.

உண்மையில் கேரின் மார்ஜோரி என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வி எழலாம். அவர் செயற்கை நுண்ணறவு திறனைப் பயன்படுத்தும் Forever Voices எனும் நிறுவனத்தோடு இணைந்து தன்னுடைய குரல், உடலமைப்பு, உடல்தோற்றம், நடத்தை முறைகள் என்று அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு செயற்கையான உருவமைப்பு கொண்ட ஒரு விர்ச்சுவல் பெண்ணை (காதலியை) உருவாக்கி இருக்கிறார். அந்த காதலியோடு உரையாடுவது போன்ற சேவைதான் தற்போது டெலிகிராமில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காதலியிடம் நாம் என்ன பேசினாலும் அது பதிலளிக்கும் என்பதுதான் தற்போது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி காதலியை உருவாக்க உண்மையில் கேரின் மார்ஜோரியின் 2,000 வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். உண்மையில் ஒரு நிஜ பெண்ணிடம் பேசினால் என்ன வகையான உணர்வுகள் ஏற்படுமோ அதேபோன்ற உணர்வுகள் தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டியில் உருவாக்கப்பட்ட பெண்ணின் உரையாடலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இளைஞர்களிடையே வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.

ஏற்கனவே இல்லாத ஒரு விஷயத்தை கற்பனையில் காட்டி விர்ச்சுவல் ரியாலிட்டி ((VR) தொழில்நுட்பங்கள் நம்மை பயமுறுத்தும் நிலையில் கேரின் மார்ஜோரி உருவாக்கி இருக்கும் விர்ச்சுவல் காதலி குறித்த தகவல் தற்போது நெட்டிசன்களிடம் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் நாயகியா? அப்ப தீபிகா படுகோன் என்ன ஆச்சு..?

நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகவும் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை

விஜய்க்கு அப்பா சஞ்சய் தத் என்றால் அர்ஜுனுக்கு என்ன கேரக்டர்.. 'லியோ' படத்தின் சுவாரஸ்யமான தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத் நடித்து வருகிறார் என்றும் இருவரும் கேங்ஸ்டர் ஆக நடித்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.

நம்ம பயலை சாவடி, சாதிக்காக செத்து சாமியாக்கட்டும்: 'கழுவேத்தி மூர்க்கன்' டிரைலர்

அருள்நிதி நடிப்பில் உருவான 'கழுவேத்தி மூர்க்கன்'  என்ற திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மலேசியாவில் விஜய் சேதுபதியின் அடுத்த பட பூஜை.. இயக்குனர் இவர் தான்..!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் அவர் ஏற்கனவே 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

செட்டில் இருந்த நடிகர் சல்மான் கானுக்கு காயம்… வைரல் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் சல்மான்கான் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது காயம் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்