குணச்சித்திர நடிகை பசி சத்யாவின் கலைத்துறை பயணம்


Send us your feedback to audioarticles@vaarta.com


பசி என்ற திரைப்படம் மூலமாக பசி சத்யா என்ற அடைமொழியுடன், தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றிய மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் தோன்றிய, தமிழக அரசால் கலைமாமணி விருதை வென்ற நடிகை பசி சத்யா அவர்கள், அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
அவர் கூறியதாவது,
வாழ்க்கையில் பசி என்பது ரொம்ப முக்கியம்.ஆனால் பசி என்பது வயிற்று பசி மட்டுமல்ல. ஆசைப்பசி ,கனவுப்பசி, கலைப்பசி, வேலைப்பசி என இவை எல்லாம் இருந்தால் தான் மனிதனின் மொத்த வாழ்க்கையும் முழுமை பெறும்.
ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.எனது சிறுவயதில் சந்திரா என்ற பெயரை சத்யா என மாற்றினர்.பிறகு நிறைய நாடகத்தில் நடித்தேன்.
நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த காரணத்தினால் எனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.பிறகு சில குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்தேன்.அந்த சமயத்தில் ஒரு தயாரிப்பாளர் மூலமாக வந்த வாய்ப்பில் என்னுடன் சேர்ந்து கவுண்டமணி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
கவுண்டமணி தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற எண்ணத்தில் நடந்து கொள்வார்.சினிமாவிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை...சினிமா நான் ஏற்று விரும்பி வந்ததும் இல்லை. எதிர்பாராத விதமாக நடிகர் சங்கத்தில் இருந்து வந்த வாய்ப்புகளே என கூறியுள்ளார்.
பசி சத்யா கூறிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments